ரிஷிவந்தியத்தில்ரூ.2.69 கோடியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிவசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

ரிஷிவந்தியத்தில் ரூ.2.69 கோடியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வரதராஜபெருமாள் கோவில் வரை ரூ.2 கோடியே 69 லட்சம் செலவில் 1,650 மீட்டர் தூரம் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது. இதற்கு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து கால்வாய் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் வினிதா மகேந்திரன் உட்பட நிர்வாகிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






