ரூ.65 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி
துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.65 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்
ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு ஊராட்சியில் புதுமனை முதல் மதன் நகர் வரை கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாகணேஷ் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பாபு, ஒன்றிய கவுன்சிலர் திருக்குமரன், ஊராட்சிமன்ற துணைத் தலைவர் விஜய், வார்டு உறுப்பினர் அண்ணாதுரை, குமரேசன், சுகன்யாபிரகாஷ், சுப்பிரமணி, பவானிவிஜய், நிதாஅப்ரீன் அக்பர், ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story