கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி; பொதுமக்கள் முற்றுகை


கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி; பொதுமக்கள் முற்றுகை
x

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்த பகுதியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

திருச்சி பொன்மலைப்பட்டி அருகே கொட்டப்பட்டு ஐஸ்வர்யா எஸ்டேட் உள்ளது. இந்த பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டும், சாலை வசதி சரியாக இல்லாமலும் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனா். இந்த நிலையில் திடீரென அந்த பகுதியில் பூங்கா மற்றும் நூலகம் அமைப்பதற்காகவும், பொது இடத்தில் பாதாள சாக்கடை பணிக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ெபாக்லைன் எந்திரம் மூலம் ராட்சத குழிகள் தோண்டப்பட்டு வருகிறது.

முற்றுகை

இந்த சுத்திகரிப்பு நிலையம் வந்தால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அதன் அருகே ரேஷன் கடை, குடிநீர் தொட்டி உள்ளிட்டவைகள் உள்ளன. எனவே இங்கு சுத்திகரிப்பு நிலையம் வேண்டாம் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை பணிகள் நிறுத்தாமல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அப்பகுதி பொதுமக்கள் சுத்திகரிப்பு நிலையத்தில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் நடைபெற்று கொண்டிருந்த பணியை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story