ரூ.94 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி


ரூ.94 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி
x

ஜோலார்பேட்டை அருகே ரூ.94 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை தேவராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மூக்கனூர் புதுப்பேட்டை ரோடு முதல் மாக்கனூர் ரோடு வரை ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் தார் சாலை அமைக்கும் பணியை ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜ் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவக்குமார், கந்திலி பிரபு, பூரிகமானிட்டா பரமசிவம், ஒப்பந்ததாரர் தாமோதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மூக்கனூர் புதுப்பேட்டை கூட்ரோட்டில் இருந்து மாக்கனூர் ரோடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் வரை தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலையை 5 வருடம் பராமரிப்பதற்காக ரூ.7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Next Story