மாமல்லபுரத்தில் ரூ.1¼ கோடியில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
மாமல்லபுரத்தில் ரூ.1¼ கோடியில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் நடந்தது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஒத்தவாடை தெரு சுற்றுலா பயணிகள் வந்து தங்கும் முக்கிய பகுதியாக திகழ்கிறது. இந்த பகுதியில் உள்ள சாலைகள் சிதிலமடைந்து சுற்றுலா வாகனங்கள் பயணம் செய்ய முடியாத வகையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து அலங்கோலமாக காணப்பட்டன. இதையடுத்து ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் ஒத்தவாடை தெருவின் குருக்கு தெரு மற்றும் வேதாசலம் நகர் போன்ற பகுதிகளில் தார் சாலைகள் அமைக்கும் பணி நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் நடந்தது.
இதில் மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் எம்.வி.மோகன்குமார், லதா குப்புசாமி, கஜெலட்சுமி கண்ணதாசன், பி.எஸ்.பூபதி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. பிறகு சிதிலமடைந்த சாலைகளை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் பெயர்த்து எடுத்து சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
Related Tags :
Next Story