தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி


தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 29 Jan 2023 6:47 PM GMT)

மன்னார்குடியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடியில் உள்ள பஸ் நிலையம் இடிக்கப்பட்டு ரூ.30 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் நவீன முறையில் கட்டப்பட உள்ளது. இதை தொடர்ந்து தற்காலிக பஸ் நிலையம் மன்னார்குடி தேரடி உள்ள நகராட்சி கலையரங்க திடலுக்கு மாற்றப்பட உள்ளது. இதனையொட்டி கலையரங்கத்திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க ரூ.85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் 155 மீட்டர் நீளமும், 25 மீட்டர் அகலமும் கொண்ட புதிய தார் தளம் அமைப்பது மற்றும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவது ஆகிய பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர சபை துணைத் தலைவர் கைலாசம், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் குணசேகரன், நகராட்சி மேலாளர் மீரான் மன்சூர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story