புதிய பாலம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்


புதிய பாலம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்
x

புதிய பாலம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தியாகதுருகம் அருகே விருகாவூரில் கள்ளக்குறிச்சி- வேப்பூர் நெடுஞ்சாலை குறுக்கே ஓடையில் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்து உள்வாங்கியது. இதனால் ஓடையில் கழிவுநீர் மற்றும் மழைநீர் சீராக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் சாலையில் வழிந்து ஓடியது. இது பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் நேரில் சென்று சேதமடைந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம், கழிவுநீர் சீராக செல்ல உடனே மாற்று ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினார். தொடர்ந்து பொதுமக்களிடம் புதிய பாலம்அமைக்கும் பணிகள் விரைந்து தொடங்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், துணைத்தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் கே.கே.அண்ணாதுரை, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் எத்திராஜ், மடம் பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பு. இளங்கோவன், கொடியரசி, சந்திரலேகா, கிளை நிர்வாகிகள் கோவிந்தராஜ், சங்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story