தியாகதுருகத்தில் ரூ. 3½ கோடியில் ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி: அதிகாரி ஆய்வு
தியாகதுருகத்தில் ரூ. 3½ கோடியில் ஒன்றிய அலுவலகம் கட்டும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்,
தியாகதுருகம்,
தியாகதுருகத்தில் ரூ.3 கோடியே 55 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கட்டுமான பணிகளை ஊரக வளர்ச்சித் துறையின் தலைமை பொறியாளர் குட்டாலிங்கம் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் நடைபெறும் வேலைகளை பார்வையிட்டார். கட்டிடத்தில் காற்றோட்ட வசதிக்காக கூடுதல் ஜன்னல் அமைக்க வேண்டும். தரமான முறையில் கட்டிடத்தை கட்டி, பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினார்.
அப்போது ஒன்றிய குழு தலைவர் தாமோதரன், துணைத் தலைவர் நெடுஞ்செழியன், ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட செயற்பொறியாளர் மலர்விழி, ஒன்றிய உதவி பொறியாளர்கள் ஜெயபிரகாஷ், விஜயன், இளந்தென்றல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.