ரூ.25 லட்சத்தில் நகர்நல மையம் கட்டும் பணி

ரூ.25 லட்சத்தில் நகர்நல மையம் கட்டும் பணியை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர்
கோவை சிங்காநல்லூர் அருகே கல்லூரி நகரில் ரூ.25 லட்சத்தில் நகர்நல மையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதை நேற்று காலை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அவர் அங்கு வாகனத்தில் வீடு வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்கும் பணியை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தூய்மை பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
இதையடுத்து காவெட்டி நாயுடு லே-அவுட்டில் குடிநீர் வினியோகம் சீராக வருகிறதா? என்று பொதுமக்களிடம் கேட்டறிந்த ஆணையாளர் பிரதீப், ஹட்கோ காலனியில் மியா வாக்கி அமைக்கப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.
Next Story






