ரூ.38 லட்சத்தில் உதவி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணி


ரூ.38 லட்சத்தில் உதவி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணி
x

நாகலூரில் ரூ.38 லட்சத்தில் உதவி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணி தொடக்க விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பில் உதவி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடகட்டுமான பணிதொடக்க விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றியக்குழு துணைத்தலைவர் நெடுஞ்செழியன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அவர் விளக்கி பேசினார். இதில் உதவி செயற்பொறியாளர் சின்னப்பன், வேளாண்மை அலுவலர் வனிதா, உதவி வேளாண்மை அதிகாரி வினோத், உதவி பொறியாளர்கள் தமிழ் செல்வன், பாஸ்கரன், கணேசன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் எத்திராஜ், மலையரசன், ஒன்றிய துணைச் செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் நெடுஞ்செழியன், அசகளத்தூர் கலியன், ஒன்றிய கவுன்சிலர் தேவி பழனிவேல் மற்றும் கிராம மக்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைதலைவர் அருள் மணிவண்ணன் நன்றி கூறினார்.


Next Story