தூக்குப்போட்டு கட்டிட தொழிலாளி தற்கொலை
திருப்புல்லாணி அருகே தூக்குப்போட்டு கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பொக்காரனேந்தலை சேர்ந்தவர் முனியசாமி (வயது 46). கட்டிட வேலைக்கு சென்று வந்தார். கடந்த 16-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்ற அவர் வீடு திரும்பாமல் அந்த பகுதிகளில் சுற்றி திரிந்து வந்தாராம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்புல்லாணி கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தின் அருகில் உள்ள மரத்தில் மனைவியின் சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story