சோழிங்கநல்லூரில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு


சோழிங்கநல்லூரில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு
x

சோழிங்கநல்லூரில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றபோது 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

செங்கல்பட்டு

மத்திய பிரதேச மாநிலம் மோனரைனா மாவட்டம் தொங்கா சபலகாட் கிராமத்தைசேர்ந்தவர் ராம்விலாஸ் ராவத் (வயது 31). அதே ஊரை சேர்ந்தவர் பதாம் ராவத். இவர் சென்னையில் கட்டிட வேலை செய்வதற்காக ராம்விலாஸ் ராவத்தை அழைத்து வந்தார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருவரும் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு ராம்விலாஸ் ராவத் பணிபுரியும் கட்டிடத்தின் 2-வது மாடியில் நடந்து சென்றபடி செல்போனில் மனைவியுடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது பயத்தில் கணவர் கத்தும் சத்தம் கேட்டதும் கணவரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. இதையடுத்து அவரது மனைவி உடன் வேலை செய்தவர்களுக்கு செல்போனில் தொடர்புகொண்டு கேட்டார். அவர்கள் பார்த்தபோது ராம்விலாஸ் ராவத் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது. அவர்கள் உடனடியாக அவரை மீட்டு காரப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராம்விலாஸ் ராவத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story