ஒரே நாளில் கட்டிட தொழிலாளி-இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


ஒரே நாளில் கட்டிட தொழிலாளி-இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஒரத்தநாடு அருகே கட்டிட தொழிலாளியும், இளம் பெண்ணும் ஒரே நாளில் தனித்தனியே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே கட்டிட தொழிலாளியும், இளம் பெண்ணும் ஒரே நாளில் தனித்தனியே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கட்டிட தொழிலாளி

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே பூவாளூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன்(வயது 36). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு மனைவியும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கண்ணதாசன், கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்த நாடிமுத்து மனைவி ரேகா(23) என்பவரை தன்னுடன் கட்டிட வேலைக்கு அழைத்து சென்று வந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக கண்ணதாசனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியதுடன் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.

ஒரே நாளில் 2 பேரும் தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கண்ணதாசன் தனது வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்ணதாசனின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் கண்ணதாசன் தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்த ரேகாவும் நேற்று மதியம் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு இடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் ரேகாவின் உடலையும் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக வாட்டாத்திக்கோட்டை போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவறான உறவு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதால் தொழிலாளியும், இளம் பெண்ணும் ஒரே நாளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story