கட்டிட தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை
தேசூர் அருகே முன்விரோதம் காரணமாக கட்டிட தொழிலாளி கல்லால் அடித்துக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு
தேசூர் அருகே முன்விரோதம் காரணமாக கட்டிட தொழிலாளி கல்லால் அடித்துக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கட்டிட தொழிலாளி
திருவண்ணாமலை மாவட்டம் தேசூரை அடுத்த சிங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (44). வெங்கடேசனும், ராஜாவும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி இரவு வெங்கடேசன் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அடித்துக் கொலை
அப்போது அங்கு மறைந்திருந்த ராஜா சிமெண்டு கல்லால் வெங்கடேசன் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது
. இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் வலிதாங்கமுடியாமல் அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து வெங்கடேசனை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சைபெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதுகுறித்து தேசூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து வந்தவாசி சிறையில் அடைத்தனர்.