கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி
புதுக்கடை:
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை கொட்டாரத்துவிளையை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது37), கொத்தனார். இன்னும் திருமணமாகவில்லை. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்த அவர் புதிதாக வீடு கட்டி வந்தார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்திரசேகர் தான் புதிதாக கட்டி வந்த வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அப்போது அங்கு சென்ற சகோதரர் இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சந்திரசேகரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story