சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கட்டிட தொழிலாளி தீக்குளிக்க முயற்சி


சேலம் கலெக்டர் அலுவலகத்தில்  கட்டிட தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
x

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கட்டிட தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

சேலம்

சேலம்,

சேலம் சேலத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 34), கட்டிட தொழிலாளியான இவர் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் தீக்குளித்து தற்கொலை செய்வதற்காக திடீரென பையில் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை எடுத்தார். அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தங்கராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் அவர் கூறும் போது, 'எனக்கு சொந்தமான சொத்தின் ஒரு பகுதியை ரூ.7 லட்சத்துக்கு விற்றேன். பின்னர் இந்த பணத்தை எனது ஊரை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்தேன். மேலும் நம்பிக்கையின் பேரின் அவரிடம் மற்ற சொத்தின் பத்திரத்தையும் கொடுத்து வைத்திருந்தேன். இந்த நிலையில் அவரிடம் பணம், பத்திரத்தை திருப்பி கேட்ட போது பிரிந்து சென்ற எனது மனைவியிடம் கொடுத்து விட்டதாக கூறி விட்டார். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மனவேதனை அடைந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்து இங்கு வந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story