கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்


நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டிட தொழிலாளர்கள்

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ்மோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாலகுரு முன்னிலை வகித்தார். தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் முத்தையன், மாவட்ட தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மத்திய அரசின் 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். 36 நல வாரிய உறுப்பினர்களை பாதுகாக்கும் திட்டங்களை கொண்டு வர வேண்டும். நல வாரிய அட்டை உள்ள அனைவருக்கும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சிமெண்டு, மணல், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

முடக்கப்பட்ட ஓய்வூதியம்

முடக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இடம்பெயரும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், இலவச மருத்துவ உதவி, குழந்தை பராமரிப்பு சேவை, கல்வி உதவி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் மீனவர் பெண்கள் பேரவையை சேர்ந்த அருட்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story