தேனியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தேனியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 July 2023 2:30 AM IST (Updated: 19 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தொழிலாளர் நல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமான வாரிய கூட்டங்களில் முடிவு செய்ததை அரசாணையாக வெளியிட வேண்டும். மாத ஓய்வூதியம் ரூ.1,000 என்பதை உயர்த்தி ரூ.3 ஆயிரமாக வழங்க வேண்டும். பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆதார் எண் மற்றும் பல காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ள ஓய்வூதிய பணப் பலன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணைச்செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜெயபாண்டி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

1 More update

Next Story