கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு சிதம்பரனார் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன், பொருளாளர் காசி ஆகியோர் பேசினர்.

கோரிக்கை

ஆர்ப்பாட்டத்தில் தீபாவளி பண்டிகை கால போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், பெண் தொழிலாளிக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், விபத்து எங்கு நடந்தாலும் ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும், வீடு இல்லாத கட்டுமான தொழிலாளிக்கு வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமான தொழிலுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story