கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் பச்சையப்பன் மற்றும் செல்வரங்கம், முனுசாமி, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் விஜயகுமார், செந்தில், வீராசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும், மாத ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் ராஜி, நிர்வாகிகள் பூமாலை, ரீட்டா, ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story