கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகையான கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அழகர், பொருளாளர் அரவிந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கட்டுமான தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டுகளில் வழங்கியதை போன்று பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் மீது விசாரணை நடத்தி அச்சுறுத்துவதை கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தொழிலாளர் நலவாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி உதவி, திருமண உதவி, இயற்கை மரணத்திற்கு வழங்கப்படும் நிவாரண உதவி, விபத்து இடர்பாடுகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story