கட்டுமான தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம்
கட்டுமான தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்ட பாரதிய கட்டுமான தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம் வெங்கமேட்டில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருப்பையா வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் விமேஸ்வரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், 1-ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும், அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் மாத ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும், பருவமழை காலங்களில் வேலை இல்லாமல் பாதிக்கப்படும் கட்டுமான தொழிலாளர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில் உள்ள பல்வேறு நிபந்தனைகளை தளர்த்தி அனைவருக்கும் விரைவாக வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.