கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர்
விருதுநகரில் மாவட்ட நல வாரிய அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். புதுப்பிக்க தவறிய 60 வயது பூர்த்தி அடைந்த கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விபத்து எங்கு நடந்து இருந்தாலும் ரூ. 5 லட்சம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story