கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். சென்ற ஆண்டு வழங்கியது போல் பொங்கல் பொருட்கள், வேட்டி, சேலை வழங்க வேண்டும். பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தை விரிவுப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி திருவாரூர் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், சிறப்பு மாவட்ட தலைவர் அனிபா, சங்க மாவட்ட நிர்வாகிகள் ரமேந்திரன், இப்ராஹிம் சேட், சீனிமணி, ஜோதிபாசு உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story