செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை


செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை
x

சென்னை, தலைமைச் செயலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது

சென்னை,

சர்வதேச அளவில் 44 -வது 'செஸ் ஒலிம்பியாட்' சதுரங்க போட்டிகள் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்த போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது.

இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ், நம்ம பெருமை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெறுகிறது.

இந்த நிலையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில், செஸ் போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட 18 குழுக்களுடன் ஆலோசனை நடக்கிறது .


Next Story