முதுகலை மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு
நாமக்கல் - திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் முதுகலை படிப்பில் எம்.ஏ. தமிழ், பொருளியல், வரலாறு, எம்.காம், எம்.எஸ்சி.கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் என 11 பாடப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் 296 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான மாணவிகள் சேர்க்கைக்கு கல்லூரி கல்வி இயக்ககத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கல்லூரி கல்வி இயக்கம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட ரேங்க் பட்டியல் அடிப்படையில் நேற்று கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது. இந்த கலந்தாய்வுக்கு கல்லூரி முதல்வர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். இதையொட்டி பேராசிரியர்கள் மூலம் சான்றிதழ்கள் மற்றும் அரசின் ஒதுக்கீடுகள் சரிபார்க்கப்பட்டு, சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டது. விடுபட்ட நபர்களுக்கு தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை) கலந்தாய்வு நடைபெற உள்ளது.