கலந்தாய்வு கூட்டம்


கலந்தாய்வு கூட்டம்
x

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தஞ்சை மாவட்ட போலீஸ்துறையில் பணி புரியும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கோர்ட்டுகளில் பணிபுரியும் அரசு வக்கீல்கள், தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ நிலைய அலுவலர்கள் பங்கேற்றனர்.

நிலுவை வழக்குகள்

கூட்டத்தில், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் எவ்வளவு? இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்பதை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கேட்டறிந்தார். மேலும் அவர், கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை எல்லாம் விரைவாக முடிக்க வேண்டும். துப்பு துலங்காமல் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க தீவிர கவனமுடன் செயல்பட வேண்டும். போக்சோ வழக்குகளில் இன்ஸ்பெக்டர்கள் நேரில் ஆஜராகி அந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வு

அதைத்தொடர்ந்து அவர், தஞ்சை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் எவ்வாறு தடுப்பது, அதில் போலீசாரின் நுணுக்கமான பணிகள் என்ன என்பது குறித்த பல்வேறு விளக்கங்களை எடுத்து கூறினார். பின்னர் அவர், போலீசாருக்கு ரோந்து பணிக்காக வழங்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்தார்.


Next Story