ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்
சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
ஓட்டப்பிடாரம்:
சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கலந்தாய்வு கூட்டம்
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியில் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழா வருகிற 16-ந் தேதி நடக்கிறது. இதைமுன்னிட்டு ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிசாந்தினி தலைமையில் தாலுகா அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் கவனர்கிரி கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவில் முன்பு பொங்கல் வைத்து அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கவர்னகிரி சுந்தரலிங்கனார் மணி மண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு பூஜை நடத்திட வேண்டும். குறுக்குச்சாலை, நடுவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் இருந்து சுந்தரலிங்கனார் நினைவு ஜோதி இரவு 8 மணிக்குள் மணிமண்டபத்திற்கு கொண்டு வரவேண்டும்.
சட்டம்-ஒழுங்கு
வருகிற 16-ந் தேதி மாட்டு வண்டி போட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி 17-ந் தேதி நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழாவின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் விழாவினை சமூகமான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜன், வீரன் சுந்தரலிங்கனார் பேரவை தலைவர் முருகன், செயலாளர் தேவேந்திரன், வழக்கறிஞர் கனகராஜ், விழா ஒருங்கிணைப்பாளர் கோவில்பிள்ளை, சுந்தரலிங்கனார் நேரடி வாரிசு பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.