கல்லூரி முதல்வர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
புதுமைப்பெண் திட்ட 3-ம் கட்ட உதவித்தொகை வழங்க கல்லூரி முதல்வர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புதுமைப்பெண் திட்டத்தின் 3-ம் கட்ட உதவித்தொகை வழங்குவது தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், புதுமைப்பெண் திட்டத்தின் 3-ம் கட்டத்தில் விண்ணப்பிக்கும்போது மாணவிகளின் பள்ளி விவரங்கள் மற்றும் ஆதார் விவரங்களை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். 3-ம் கட்டத்தில் இதுவரை 1,035 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது. மேலும் இதுவரை கலந்தாய்வு முடியாத கல்லூரிகள் (மருத்துவ கல்லூரிகள்) கலந்தாய்வு முடிந்தவுடன் தகுதியான மாணவிகளை இத்திட்டத்தில் விரைந்து விண்ணப்பிக்க செய்ய வேண்டும். மாணவிகள் விண்ணப்பிக்கும்போது அவர்கள் வங்கி கணக்கு தொடங்குவதற்கு முதன்மை வங்கி மேலாளர் ஒத்துழைப்பு அளித்து மாணவிகள் தடையின்றி இத்திட்டத்தில் பயனடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.