விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம்


விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம்
x

விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம்

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நாகப்பட்டினம் கிளை மேலாளர் வித்தியா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகளுக்கு விவசாய கடன் எளிதாக பெரும் வழிமுறைகள், விவசாயிகளுக்கு விவசாயம் தவிர கூடுதல் வருமானத்திற்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு கடன் பெறுதல் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் வங்கியின் திட்ட விளக்க விரிவுரையாளர் சஞ்சய் ராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வனம் அய்யப்பன் நன்றி கூறினார்.


Next Story