வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்


வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்
x

சோளிங்கரில் வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2-ந் தேதி அரசு சார்பில் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வஜ்ரவேல், சித்ரா, வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் அலமேலு ஆகியோர், நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமிற்க்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 40 ஊராட்சி நிர்வாகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்கள், இளம்பெண்களை பங்கேற்க செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் செங்கல் நத்தம் பிச்சாண்டி, தலங்கை மாரிமுத்து, வெங்கப்பட்டு ராமன், கொடைக்கல் கார்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கேசவன் குப்பம் தாசரதி, பாண்டியநல்லூர் கல்யாணி ரகுராமராஜூ, வாங்கூர் அம்சவேணி பெரியசாமி, கரிக்கல் நிர்மலா, ரெண்டாடி பாபு மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story