வனச்சட்ட சமுதாய உரிமைகள் குறித்து கருத்து கேட்கும் கூட்டம்
வால்பாறை பகுதி மலைவாழ் கிராம மக்களிடம் வனச்சட்ட சமுதாய உரிமைகள் குறித்து கருத்து கேட்கும் கூட்டம் சப்- கலெக்டர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது.
வால்பாறை பகுதி மலைவாழ் கிராம மக்களிடம் வனச்சட்ட சமுதாய உரிமைகள் குறித்து கருத்து கேட்கும் கூட்டம் சப்- கலெக்டர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது.
கருத்து கேட்பு கூட்டம்
வனச்சட்டத்திற்கு உட்பட்டு தங்களது வாழ்விடங்களில் கிடைக் கும் வனவிளை பொருட்களை பங்கிட்டு கொண்டு வாழ்வாதாரங் களை மேம்படுத்த சமுதாய உரிமைகள் வழங்குவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் பொள்ளாச்சி சப்- கலெக்டர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது.
இதில், வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி, வால்பாறை வனச்சரக வனப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியினர் மலைவாழ் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மலைவாழ் மக்கள் எதிர்ப்பு
கூட்டத்தில், நெடுங்குன்று, பாலகிணாறு, கூமாட்டி, பரமன்கடவு, சங்கரன் குடி, தெப்பக்குளமேடு, சிங்கோனா ஆகிய மலைவாழ் கிராம மக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தின் அடிப்படை யில் வாழ்வாதாரங்களை மேம்படுத்த மலைவாழ் கிராமங்களுக் குள் பிரச்சினைகள், பாகுபாடுகள், தொழில்ரீதியான மோதல்கள் ஏற்படாமல் தேன், இஞ்சி, மஞ்சள், கொங்கிலியம், சாம்பிராணி, சீகக்காய் போன்ற வனவிளை பொருட்களை பகிர்ந்து வாழ்வது குறித்து ஆலோசனைகள் கேட்கப்பட்டது.
இதில், உலகளாவிய நிதிய அமைப்பு சார்பில் தயாரிக்கப்பட்ட வரைபடம் அடிப்படையில் பயன்பாட்டு இடங்களை வரையறை செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. அதற்கு மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரிவினை வேண்டாம்
மேலும் மலைவாழ் கிராம மக்கள் கூறுகையில், எங்களுக்குள் பாகுபாடுகளையும், பிரிவினைகளையும் உண்டாக்க வேண்டாம். நாங்கள் எங்களுக்குள் எந்தவித பிரச்சினைக்கும் இடம் கொடுக் காமல் எங்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்கிறோம் என்றனர்.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா பேசும் போது, நீங்கள் தெரிவித்த கருத்துக்களை குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்படும்.
பின்னர், உங்களுக்கு சமுதாய உரிமை இடங்களை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குடியிருப்பு மாற்றம்
இதைத்தொடர்ந்து மலைவாழ் கிராம மக்கள் பேசும் போது, மலைவாழ் மக்களின் குடியிருப்பு பகுதிக்கு குடிதண்ணீர், சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும்.
பாலகிணாறு குடியிருப்பு பகுதி மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் அவசர காலங்களில் கிராம மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நெல்லிக் காமேடு பகுதிக்கு குடியிருப்பை மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு பதில் அளித்த சப்-கலெக்டர் பிரியங்கா, வனத்துறை மூலம் பாலகிணாறு பகுதியில் உரிய ஆய்வு செய்யப்படும்.
நெல் லிக்காமேடு பகுதியில் உங்கள் மூதாதையர் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருந்தால் குடியிருப்பை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.