விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீதிகளில் பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபாடு செய்வது குறித்து வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் சப்-கலெக்டர் வினோத்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய ஆலோசனைகளை சப்-கலெக்டர் கூறினார். மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். ேமலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்த 5 நாட்களுக்குள் சிலைகளை கரைக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story