கோடைவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்
வால்பாறையில் கோடைவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் பிரியங்கா தலைமையில் நடந்தது.
பொள்ளாச்சி
வால்பாறையில் கோடைவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் பிரியங்கா தலைமையில் நடந்தது.
கோடை விழா
கோவை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றான வால்பாறையில் ஆண்டு தோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். வால்பாறை கோடை விழாவையொட்டி மலர் கண்கட்சி, காய்கறி கண்காட்சி, உணவு மேளா, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இதனால், கோடை விழாவை கண்டுகளிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்ட, வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வால்பாறைக்கு வருவார்கள். பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக வால்பாறையில் கோடை விழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு வால்பாறையில் கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
இதன்படி வால்பாறையில் கோடை விழா வருகிற 26-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார்.
இதில் கோடைவிழாவுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது, கழிப்பிட வசதிகள் செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கமலக்கண்ணன், தாசில்தார்கள் அருள்முருகன், அரசகுமார், வெங்கடாசலம், சங்கீதா மற்றும் பல்வேறு துறை அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.