காலை உணவு திட்டத்தை மாவட்டம் முழுவதும் செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்
காலை உணவு திட்டத்தை மாவட்டம் முழுவதும் செயல்படுத்துவது குறித்த ஆலோசனை நடந்தது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தை மாவட்டம் முழுவதும் செயல்படுத்துவது தொடர்பாக இத்திட்டத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 77 தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3,469 பள்ளி மாணவ-மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். தற்போது திட்டத்தை விரிவாக்கம் செய்து கரூர் மாவட்டம் முழுவதும் 628 மையங்களில் செயல்பட உள்ளது. இதன்மூலம் 25,980 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். அதற்காக மாவட்டம் முழுவதும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நியமிக்கப்பட்ட பொறுப்பு அலுவலர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து சிறந்த முறையில் செயல்பட்டு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த முன்வர வேண்டும், என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.