சுதந்திரதின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்


சுதந்திரதின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2023 12:30 AM IST (Updated: 9 Aug 2023 12:35 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் சுதந்திரதின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் சுதந்திரதின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

காவல் துறை அணிவகுப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டும். கொடிக்கம்பம் மற்றும் புதிய கொடி, அதற்கான கயிறு ஆகியவற்றை ஏற்பாடு செய்திட வேண்டும். வளாகத்தை தூய்மைப்படுத்தி, குடிநீர் ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளையும், கொடிக்கம்பம் மற்றும் விழா மேடை அருகே வண்ணக்கோலம் இடுதல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம்

தியாகிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று நினைவு பரிசு மற்றும் சால்வை வழங்க வேண்டும். கலை நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கான நினைவு பரிசு வழங்க ஏற்பாடு செய்திட வேண்டும். பிரதான வாயிலில் அலங்கார வளைவு அமைத்தல், வெப்பநிலை பரிசோதித்தல், கிருமி நாசினி தெளித்தல், விழாவிற்கு வருகை புரியும் நபர்களின் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விழா நடக்கும் இடத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் நடமாடும் குழு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலால் உதவி ஆணையாளர் வரதராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story