கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்


கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நம்பவர் மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. 10-ம் நாள் விழாவான நவம்பர் மாதம் 26-ந் தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இவ்விழாவையொட்டி பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைf;F வருகை தருவார்கள்.

இந்த நிலையில் நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

இதில் தீபத் திருவிழாவின் போது துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது நகராட்சி சார்பில் தற்காலி பஸ் நிலையங்களும், கிரிவலப்பாதை மற்றும் நகரப்பகுகிளில் சாலைப்பணிகள், தூய்மைப்பணிகள், குடிநீர் வசதிகள் போன்றவற்றை மேம்படுத்துவது குறித்தும், ஊரக வளர்ச்சித்துறையில் கிரிவலப்பாதையில் உள்ள ஊராட்சிப்பகுதிகளில் தூய்மைப்பணிகள், கழிவறை வசதிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது குறித்தும், காவல் துறை சார்பில் பாதுகாப்புபணிகள், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

அனுமதி சீட்டு

மேலும் சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்குவது, தீபத்தன்று மலைமீது ஏறுவதற்கு அனுமதி சீட்டு வழங்குவது, அன்னதானம் வழங்குவதை முறைப்படுத்துவது, கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் மருத்துவக்குழுக்கள் அமைப்பது, ஆம்புலன்சு சேவை, தீயணைப்பு துறை சார்பில் கிரிவலப்பாதையில் முக்கிய இடங்களில் மீட்பு பணிகளுக்கு தீயணைப்பு வாகனங்களை முன்னெச்சரிக்கைகாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப்பணிகள், பாதுகாப்பு பணிகள், பக்தர்கள் வசதி உள்ளிட்ட அனைத்து துறை சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், இந்து சமய மற்றும் அறநிலைய துறை மண்டல இணை ஆணையர் சுதர்ஷன், கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story