வாக்குச்சாவடி பட்டியல் குறித்து கலந்தாய்வு கூட்டம்


வாக்குச்சாவடி பட்டியல் குறித்து கலந்தாய்வு கூட்டம்
x

ராணிப்பேட்டையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1,122 வாக்குச் சாவடிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலானது கடந்த 21-ந் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியலின் மீது, அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் எவருக்கேனும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில், தங்களது எழுத்துப் பூர்வமான கடிதங்களை சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலருக்கு வாக்குச் சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட 7 தினங்களுக்குள் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் புதிய வாக்குச்சாவடி அமைக்க உத்தேசிக்கப்படவில்லை என்றார்.

மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடி விவரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்டது.

மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர், தற்போது புதிய வாக்கு சாவடிகள் ஏதும் உருவாக்கப்படாததால், இறுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளவாறு மொத்தம் 1,122 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளி (பொது), வருவாய் கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், தேர்தல் வட்டாட்சியர் ஜெயக்குமார் மற்றும் அனைத்து தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.


Next Story