குடியரசு தின விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்
குடியரசு தின விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற 26-ந் தேதி அன்று குடியரசு தின விழா கொண்டாடுதல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாட வேண்டும். பல்வேறு துறை அலுவலர்களுக்கு குடியரசு தின விழா சிறப்பாக நடத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு மேற்கொண்ட பணிகளை போலவே இந்த ஆண்டும் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story