புதிய அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம்


புதிய அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம்
x

கோட்டக்குப்பம் நகராட்சி புதிய அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு குறித்து நகரமன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் நகரமன்ற கவுன்சிலர்களுடன் கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி அதன்படி நகராட்சி அலுவலகம், நகரமன்ற தலைவர் அலுவலகம், நகமன்ற உறுப்பினர்கள் கூட்டரங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து அமைப்பதற்கான வடிவமைப்புடன் கட்டிடம் கட்ட உத்தரவிட்டு தற்போது கோட்டக்குப்பம் நகராட்சி பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் இடம் தேர்வு செய்து அந்த இடத்தில் புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்களின் முழு சம்மதத்துடன் இடம் தேர்வு செய்யும் வகையில் தற்போது கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களின் முழு சம்மதத்துடன் நீங்களே தேர்வு செய்யும் இடத்தில் விரைவாக புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கேற்ப மக்களின் பிரதிநிதியாக வந்துள்ள நீங்கள் ஒன்றுகூடி இடத்தை தேர்வு செய்து நகராட்சிக்கு அனுமதித்திட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கோட்டக்குப்பம் நகரமன்ற தலைவர் ஜெயமூர்த்தி, கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் பானுமதி, நகரமன்ற துணைத்தலைவர் ஜீனத்பீவி மற்றும் நகரமன்ற கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story