முருங்கை பூங்கா அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்


முருங்கை பூங்கா அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்
x

முருங்கை பூங்கா அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் முருங்கை பூங்கா அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் முருங்கை பூங்கா அமைப்பது தொடர்பாக தொழில் முனைவோர் களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முருங்கையில் இருந்து கிடைக்கின்ற பொருட்களை எவ்வாறு மதிப்பு கூட்டுப் பொருட்களாக தயாரித்து அதை ஒருங்கிணைந்த தொழில் கூடம் அமைத்து அப்பொருட்களை சந்தை படுத்துதல் குறித்தும், தொழில் முனைவோர்கள் முதலீடு செய்வதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மேலும் முருங்கை பூங்கா அமைப்பதற்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து கொடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இதில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ், தோட்டக்கலை துணை இயக்குனர் மணிமேகலை, சிட்கோ கிளை மேலாளர் அனிதா, உதவி அலுவலர் மனோஜ், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story