கல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
கல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
க.பரமத்தி அருகே உள்ள காருடையாம்பாளையம் ஊராட்சி பகுதியில் புதிய கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் பவுத்திரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கரூர் கோட்டாட்சியர் கண்ணன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பெரும்பாலான பொதுமக்கள் இந்த பகுதியில் கல்குவாரி அமைத்தால் எங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் ஊராட்சிக்கு வருவாய் அதிகம் கிடைக்கும், அதனால் பல நன்மைகள் கிடைக்கும் என ஆதரவு தெரிவித்தனர். சமூக ஆர்வலர் முகிலன் மற்றும் சிலர் இந்த பகுதியில் கல்குவாரி அமைந்தால் நிலநடுக்கம், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும், தீமைகள் பல நடக்கும் எனவே அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், கல்குவாரி உரிமையாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கொண்டனர்