நில ஆர்ஜிதம் செய்யும் பணிக்காக உரிமையாளர்களிடம் ஆலோசனை கூட்டம்
திண்டிவனம்- நகரி ெரயில் பாதை திட்டத்திற்கு நில ஆர்ஜிதம் செய்யும் பணிக்காக உரிமையாளர்களிடம் ஆலோசனை கூட்டம் ஆரணியில் நடந்தது.
ஆரணி
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரி வரை அமைய உள்ள புதிய ெரயில் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் விவரங்கள் கேட்டறியும் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமை தாங்கினார்.
ெரயில் பாதை அமையும் இடத்தில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு அரசு மதிப்பீட்டு தொகையின்படி உரிய தொகை அவர்களுக்கு வழங்கப்படும்.
இதன் காரணமாக ெரயில் போக்குவரத்து வசதி கிடைக்கும், நிலம் வழங்கியவர்களின் நிலம் போக மீதமுள்ள நிலத்தின் மதிப்பு மார்க்கெட் விலை அதிகரிக்கும். அதுவும் அவர்களுக்கு கூடுதல் லாபம். எனவே சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் முன்வந்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் ஆர்.ஜெகதீசன் மற்றும் நில அளவை அலுவலர்கள் கலந்துகொண்டு நில உரிமையாளர்களிடம் உரிய ஆவணங்களை பெற்று ஆய்வு செய்தனர்.
இதில் 300-க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.