குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்


குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்
x

குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் இன்று நடக்கிறது.

விருதுநகர்


விருதுநகர் தொழிலாளர் துறை உதவிஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் கூறியதாவது:- 1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டம் பிரிவு 5-ன் படி தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க உரிய விசாரணைகள் மேற்கொண்டு மாநில அரசுக்கு பரிந்துரைக்க தமிழக அரசு ஒரு ஆலோசனை குழுவினை அமைத்துள்ளது. இந்த ஆலோசனை குழுவில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) செயலாளராகவும், சிவகாசி பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை உதவி இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் தொழிற்சங்கங்களை சார்ந்த மாடசாமி, மகாலட்சுமி, ஜீவானந்தம், கோவில்பட்டியை சேர்ந்த விஜய் ஆனந்த், அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் நூர்முகம்மது மற்றும் தீப்பெட்டிஆலை உரிமையாளர் லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) சிவகாசி ெரயில் நிலையம் அருகில் உள்ள அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் களப்பணி ஆய்வு நடைபெற உள்ளது. தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் வேலை யளிப்பவர்கள் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக்களை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story