பா.ஜ.க. மாவட்ட தலைவர்களுடன் அண்ணாமலை நாளை ஆலோசனை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தி.நகரில் உள்ள பா.ஜனதா மாநில தலைமையகமான கமலாலயத்தில் நாளை (8-ந்தேதி) காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. மாலை வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டு ஆலோசனை நடத்துகிறார்,
இதில் பங்கேற்பதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர்.
Related Tags :
Next Story