பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம்


பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
x

கே.ஆர்.பி. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து 2022-23-ம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உதவி செயற்பொறியாளர் அறிவொளி தலைமை தாங்கினார். கே.ஆர்.பி. அணை உதவி செயற்பொறியாளர் காளிப்பிரியன், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பரசுராமன், உழவியல் துறை பேராசிரியர் சிவக்குமார், வேளாண்மை அலுவலர்கள் பிரியா, செந்தில்குமார், நீர்வளத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பாசன சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு வருகிற ஜூலை 6-ந் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு கோரிக்கை வைப்பது. தற்போது அணைக்கு வரும் நீர் மற்றும் எதிர் வரும் மழை நீரை கொண்டு சரிசெய்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story