தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாக சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆலோசனை கூட்டம்


தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாக சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆலோசனை கூட்டம்
x

தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாக சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இந்த நீதிமன்றம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட உரிமையியல் நீதிபதி கோகுல் அரசி தலைமையில் நடந்தது. மாவட்ட குற்றவியல் நீதிபதி கலையரசி ரீனா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பட்டாணி, பவுலோஸ், பாஸ்கரன், வழக்கறிஞர் சங்க தலைவர் கல்யாண் குமார், செயலாளர் ராமச்சந்திரன், வங்கி மேலாளர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் கூட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.


Next Story