மலைவாழ் மக்களுக்கான ஆலோசனை கூட்டம்


மலைவாழ் மக்களுக்கான ஆலோசனை கூட்டம்
x

ஏலகிரி மலையில் மலைவாழ் மக்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் மலைவாழ் மக்கள் சிறு, குறு தொழில் தொடங்க மாவட்ட தொழில்மையம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு சுயதொழில், உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்க மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

வங்கி மேலாளர்கள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story