காவல்துறையினருக்கான ஆலோசனைக் கூட்டம்; போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு


காவல்துறையினருக்கான ஆலோசனைக் கூட்டம்; போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Jan 2023 6:45 PM GMT (Updated: 21 Jan 2023 6:47 PM GMT)

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான ஆலோசனைக் கூட்டம், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள், காவல்துறையினருக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும், அவற்றை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்தும், விசாரணையில் உள்ள வழக்குகளில் சாட்சிகளை காலதாமதமில்லாமல் ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் புலன் விசாரணையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை விரைந்து முடிப்பதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் ஆத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் பெற்றுத்தர நீதிமன்ற அலுவலில் சிறப்பாக பணியாற்றிய ஆத்தூர் போலீஸ் நிலைய முதல் நிலை காவலர் பொன் முத்துமாரிக்கு சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், காவல் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் ரேணியஸ் ஜேசுபாதம், மாவட்ட குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் ஜெரால்டின் வினு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story