துணை சூப்பிரண்டுகள்- தனிப்படை போலீசாருக்கான ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் துணை சூப்பிரண்டுகள்- தனிப்படை போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சூப்பிரண்டுகள் மற்றும் தனிப்படை போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம், துணை சூப்பிரண்டுகள் தூத்துக்குடி சத்தியராஜ், தூத்துக்குடி ஊரகம் சுரேஷ், திருச்செந்தூர் வசந்த்ராஜ், ஸ்ரீவைகுண்டம் மாயவன், விளாத்திகுளம் ஜெயச்சந்திரன், சாத்தான்குளம் அருள் உட்பட தனிப்படை போலீசார் பலர் கலந்து கொண்டனர்.